பாரம்பரிய ஏதென்ஸ் நகரம் பண்டைய கிரேக்கத்தின் பாரம்பரிய காலத்தில் (கிமு 480–323) குறிப்பிடத்தக்க முக்கிய நகர அரசாக இருந்தது. இது கிரேக்கத்தின் அட்டிகாவில் அமைந்துள்ளது. எசுபார்த்தா மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணிக்கு எதிரான பெலோபொன்னேசியன் போரில் இது டெலியன் கூட்டணியை வழிநடத்தியது. ஏதெனிய சனநாயகமானது கிமு 508 இல் இசகோரசின் சர்வாதிகார ஆட்சியைத் தொடர்ந்து கிளீசுத்தனீசுவின் கீழ் நிறுவப்பட்டது. இந்த அரசு அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தது. ஏதெனிய சனநாயகமானது சில காலம் தடைகளுக்கு ஆளாகினாலும் கிமு 322 வரை ( லாமியன் போருக்குப் பிறகு) 180 ஆண்டுகளாக நீடித்தது. ஏதெனிய மேலாதிக்கத்தின் உச்ச வளர்ச்சியானது கிமு 440 முதல் 430 வரை எட்டப்பட்டது. இது பெரிக்கிளீசு காலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும்...
1540 – இங்கிலாந்தின்எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி, கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார்.
242 பேருடன் சென்ற ஏர் இந்தியா வானூர்தி 171 (படம்) இந்தியா, அகமதாபாதில் தரையில் மோதி வெடித்ததில் 241 பயணிகளும், தரையில் குறைந்தது 28 பேரும் உயிரிழந்தனர்.
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,75,449 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.